ஆணினமே மெல்ல அழிந்துபோகும் அபாயம்: எச்சரிக்கும் அறிவியலாளர்கள்
குரோமோசோம்கள் உருவாகி 180 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின், சில வகை குரோமோசோம்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் துவங்கியுள்ளதால், ஆணினத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆணினமே அழிந்துபோனால்?
செயலிழக்கத் தொடங்கும் Y குரோமோசோம்கள்
மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளின் பாலினம் X மற்றும் Y குரோமோசோம்களால் தீர்மானிக்கப்படுகிறது, அவை டிஎன்ஏ மற்றும் சில புரதங்களைக் கொண்ட நூல் போன்ற அமைப்புகளாகும்.
Image: Getty Images
ஆண்களின் உடலில் X மற்றும் Y குரோமோசோகள் உள்ளன, பெண்கள் உடலில் இரண்டு X குரோமோசோம்கள் உள்ளன.
மனிதனின் பாலினத்தை தீர்மானிக்கும் இந்த குரோமோசோம்கள், ஒரு நபரின் டிஎன்ஏவில் 4 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே உள்ளன என்றாலும், அவை ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன.
இந்த குரோமோசோம்களில், தற்போது Y குரோமோசோம் குறைந்து வருவதால், ஆண்களே இல்லாத ஒரு எதிர்காலம் உருவாகலாம் என அறிவியலாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இந்த Y குரோமோசோம் மிகவும் சிறியது, Y குரோமோசோமில் 45 ஜீன்கள் மட்டுமே உள்ளன. அத்துடன், அவற்றில் ஒரே ஒரு ஜீன் மட்டுமே ஆணை உருவாக்குகிறது. Y குரோமோசோம் இல்லாமல் ஆணின் உடலில் உள்ள X குரோமோசோமால் பயன் இல்லை.
Image: Getty Images
இப்படி Y குரோமோசோம்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட சில காரணங்கள் உள்ளன என்கிறார், அவுஸ்திரேலிய மரபியல் நிபுணரான ஜென்னி கிரேவ்ஸ்.
முதலாவதாக, Y குரோமோசோம் ஆணின் விதைப்பையில் உள்ளது ஆனால், அது பெண்ணின் கருப்பையில் இல்லை.
ஆனால் விதைப்பை, ஒரு குரோமோசோம் வாழ்வதற்கு பாதுகாப்பான இடம் அல்ல. ஏனென்றால், அங்கு பல மரபணு மாற்றங்கள் நடைபெறுகின்றன.
உயிரணுவை உருவாக்க, நிறைய செல் பிரிதல்கள் தேவைப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு செல் பிரிதலின்போதும், மரபணு மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
இத்தகைய மாற்றங்கள், குரோமோசோம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமாக, ஒரு குரோமோசோமில் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய முடியும்.
ஏனென்றால், ஜோடி ஜோடியாக இருக்கும் குரோமோசோம்கள், தங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அவை மீதமிருக்கும் மற்றொரு குரோமோசோமிலுள்ள DNAவை பயன்படுத்தி தன்னை மாற்றிக்கொள்ளலாம்.
Image: Getty Images
துரதிர்ஷ்டவசமாக Y குரோமோசோமுக்கு ஜோடி இல்லாமல் அது தனியாக உள்ளது. அது மட்டுமின்றி, 97% மூதாதை ஜீன்களை அது இழந்துவிட்டது.
என்றாலும், Y குரோமோசோம்கள் அழிய இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது என கிரேவ்ஸ் கருதுகிறார். பரிணாமத்தைப் பொருத்தவரை, அதன் வீழ்ச்சி மிக வேகமாக உள்ளது.
குரோமோசோம்கள் முதன்முதலில் 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகின. அது இந்த நிலைக்கு வருவதற்கு இவ்வளவு காலம் ஆகியுள்ளது.
ஆகவே, ஆண்கள் பீதி அடைய வேண்டாம் என்கிறார் கிரேவ்ஸ். ஏனென்றால், Y குரோமோசோம்கள் முற்றிலும் மறைந்து போவதற்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்கிறார் அவர்.
அதன் பிறகு, சில எலி இனங்களில் காணப்படுவது போல, பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய ஜீன் கூட உருவாகலாம் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |