ஜலதோஷம் வந்தால் கூட பெண்களை விட ஆண்கள் அதிகம் அலட்டிக்கொள்வது ஏன்?
வீடுகளில் பொதுவாக ஆண்களுக்கு உடல் நலமில்லையென்றால், என்ன இந்த மனுஷன் கொஞ்சம் ஜலதோஷம் பிடித்தால் கூட ரொம்ப பண்றாரே என்று பெண்கள் கூறுவதுண்டு.
ஆண்கள் ஓவராக ரியாக்ட் செய்வதாகவும், சின்ன உடல் நலக் குறைவைக் கூட தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்பது போல நடந்துகொள்வதாகவும் கூறப்படுவது, நம் நாடுகளில் மட்டும் இல்லையாம், மேலை நாடுகளிலும் ஆண்கள் கதி இதுதானாம்...
அறிவியல் ஆதாரப்பூர்வமான உண்மை
ஆனால், உண்மை என்னவென்றால், ஆண்கள் முடியாததுபோல நடிப்பதில்லையாம். உண்மையாகவே, ஜலதோஷம் போன்ற சில நோய்கள் பெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிப்பதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளதாம்.
அறிவியல்பூர்வமாக, வைரஸ்கள் உடலில் நுழையும்போது, ஆணின் உடல் வேறு மாதிரியும், பெண்ணின் உடல் வேறு மாதிரியும், அதாவது, இருவரின் நோய் எதிர்ப்பு மண்டலங்களும் கூட வெவ்வேறு விதமாக ரியாக்ட் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்த உண்மைகள்
ஆய்வகங்களில் விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில், (அவை உண்மையாகவே மனிதர்களுக்கும் இப்படித்தான் நடக்கும் என்பதை உறுதி செய்யாவிட்டாலும்), பெண்களை விட ஆண்களில் நோயெதிர்ப்பு மண்டலம் பயங்கரமாக ரியாக்ட் செய்வது தெரியவந்துள்ளது.
அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், ஆண் பெண் உடலில் உள்ள, முறையே, டெஸ்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஆண், பெண் ஹார்மோன்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
201இல் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றைத் தொடர்ந்து, இன்னொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மை காரணமாக அவர்களுடைய நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளதாக கருதப்படுகிறது.
ஆக, ஆண் ப்ளூ (man flu) என்னும் ஒரு விடயம் உள்ளது உண்மைதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்காவைப் பொருத்தவரை அங்குள்ள ஆண்கள் குறைவான முறையே கைகழுவுவது, மருத்துவர்களை அடிக்கடி பார்க்க விரும்பாதது முதலான காரணிகளும் அவர்கள் அதிகம் கஷ்டப்படுவதற்கான காரணங்களில் பங்களிக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆக, இனிமேல் உங்கள் வீட்டிலுள்ள ஆண்கள் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால், அவர்கள் ஓவராக ரியாக்ட் செய்வதாக எண்ணாமல், கொஞ்சம் கூடுதலாகவே இரக்கம் காட்டுங்கள் என்கிறார் Jenna Hope என்னும் உணவியல் நிபுணர். அவர்கள் உண்மையாகவே உடல் நலம் பாதிக்கப்படும்போது பெண்களைவிட அதிகம் கஷ்டப்படுகிறார்கள் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |