சுவிட்சர்லாந்துக்குள் நுழையும்போது எல்லையில் சிக்கிய வாகனங்கள்: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
பிரான்சிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த இரண்டு வாகனங்களை நிறுத்திய அதிகாரிகள், அவற்றை சோதனையிட்டனர். திங்கட்கிழமையன்று ஜெனீவா மாகாணத்தின் Anières பகுதியில் உள்ள எல்லையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சோதனையின்போது, அந்த வாகனங்களுக்குள் ஆயிரம் லிற்றர் மதுபானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட அந்த வாகனங்களில், பிரான்சிலிருந்து மதுபானம் கடத்திவரப்பட்டுள்ள நிலையில், எல்லை அதிகாரிகள் அதை மடக்கிவிட்டார்கள். இந்த சம்பவம் தொடர்பாக, வாகனங்களை செலுத்திவந்த இரண்டு 24 வயது இளைஞர்களையும், வாகனம் ஒன்றில் பயணித்த 19 வயது இளைஞர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான எடையுள்ள பொருட்களையும் அவர்கள் கொண்டுவந்துள்ளார்கள்.
ஆகவே, அவர்கள் மீது கடத்தல் மற்றும் அளவுக்கு அதிகமான எடையுள்ள பொருட்களை கொண்டுவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.