தடை செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களான மெண்டிஸ், குணதிலக்க அமெரிக்கா அணியில் சேர உள்ளார்களா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசால் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க ஆகியோர் அமெரிக்கா அணியில் சேர உள்ளதாக பரவிய தகவல் குறித்து வீரர்களின் மேலாளர் விளக்கமளித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பயோ பபுள் விதிகளை மீறி மெண்டிஸ், திக்வெல்ல மற்றும் குணதிலக்க ஆகியோருக்கு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஒரு வருடத்திற்கும், உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஆறு மாதங்களுக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.
இதனிடையே, மெண்டிஸ் மற்றும் குணதிலக்க ஆகியோர் இலங்கை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா கிரிக்கெட் அணியில் இணைய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில், இதுகுறித்து மெண்டிஸ் மற்றும் குணதிலக்க ஆகியோரின் மேலாளர் விளக்கமளித்துள்ளார்.
அதாவது, மெண்டிஸ் மற்றும் குணதிலக்க ஆகியோர் அமெரிக்க அணியில் சேர உள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று சம்மந்தப்பட்ட வீரர்களின் மேலாளர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டுள்ள மெண்டிஸ் மற்றும் குணதிலக்க ஆகியோர், இந்த தடையை நீக்க கோரி இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், வீரர்கள் இருவர் அமெரிக்க கிரிக்கெட் அணியில் சேர உள்ளதாக பரவி தகவல், organized குழுவால் பரப்பப்பட்ட வதந்தி என்று மேலாளர் கூறினார்.