மாதவிடாய் வருவது தாமதம் ஆகுதா? இதற்கு உடல் எடைகூட பிரச்சனையா இருக்கலாம்
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் காணப்படும் ஒரு பிரச்சினையாக இருப்பது அவர்களின் மாதவிடாய் காலம் தான்.
இரத்த போக்கானது அதிகம் வந்தாலும் பிரச்சினை மற்றும் வராவிட்டாலும் பிரச்சினை தான். இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது அவர்களின் உடல்.
இந்த பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் காலப்போக்கில் குழந்தை பேற்றில் பிரச்சினை எற்படும் என்று பல வைத்தியர்களும் கூறுகின்றார்கள்.
இது முக்கியமாக எதனால் ஏற்படுகின்றது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
சமீபத்திய உடல் எடை அதிகரிப்பு
திடீரென்று உடல் எடை அதிகரித்து விட்டால், அது மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். ஆகவெ ஒழுங்கான மாதவிடாய் சூழற்சியை பெற்றுக்கொள்ள முதலில் உடல் எடையை குறைத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தமாக இருப்பது
அதிக மன அழுத்தில் இரந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே மன அழுத்தத்தில் இருந்து விடுப்பட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். சுவாச பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
தாய்ப்பால் ஊட்டுதல்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறீர்கள் என்றால் இது மாதவிடாய் பிரச்சினையை ஏற்படுத்தும் எனலாம். இதற்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தாய்பால் கொடுப்பது நின்றுவிட்டதும், அது சரியாகிவிடும்.
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள்
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மாதவிடாய் சுழற்சி தாமதப்படும். இந்த மாத்திரைகளை நிறுத்துவது மாதவிடாய் சுழற்சியை வழமைப்போன்று கொண்டு வர உதவும்.
அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது
திகமான உடற்பயிற்சி மற்றும் வேலைகளில் ஈடுபடுவது மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தும். அதீத உடற்பயிற்சி நல்லது கிடையாது. ஆகவே அதை குறைத்துக்கொண்டால் நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |