உயிர் பிரியும் சில நாட்களுக்கு முன் மனோபாலாவுக்கு இவ்வளவு கஷ்டமா? தண்ணீர் கூட குடிக்கவில்லை
பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலாவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த இரண்டு மாதங்களாகவே கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த மனோபாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மனோபாலாவின் மேனேஜர்கள், கடைசி நாட்களில் அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளனர்.
அதில், ஒரு படம் வெளியானால் அதில் நடித்த நடிகர்களுக்கு வாழ்த்துகளை சொல்வது சாரின் வழக்கம், எப்போதுமே அதை செய்துவிடுவார்.
இறுதியாக இயக்குனர் கதிரின் படத்தில் தான் மனோபாலா சார் நடித்திருந்தார்.
கமல் சாரும், மனோபாலா சாரும் நண்பர்கள் என்றாலும் அவர் படத்தில் நடித்தது இல்லை, நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
அதற்கேற்றபடி இந்தியன் 2 படப்பிடிப்பும் அமைந்து விட்டது, உடல்நிலை சரியாக இருந்தபோதே நடித்துக் கொடுத்துவிட்டார்.
லோகேஷ் கனகராஜ், சாருக்காக சிறிய கதாபாத்திரத்தை எழுதிக்கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
இதுதெரிந்ததும் சின்னப்பிள்ளை போன்று குதித்தார் மனோபாலா சார், மருத்துவமனையில் இருந்து வந்ததும் என்னடா செய்றது, ஏதாவது ஐடியா கொடுங்க என எங்களிடம் கேட்டார்.
சிகிச்சையில் இருந்த போது மிகவும் கஷ்டப்பட்டார், மாதுளை சாரும், இளநீர் மட்டுமே அவரது உணவு, அதையும் அளவாகவே எடுத்துக்கொள்வார்.
தண்ணீர் குடிக்கக்கூட கஷ்டப்பட்டார், மெதுவாகத்தான் விழுங்குவார், அவரை பார்க்கவே பாவமாக இருக்கும்.
கடைசி வரை மனோபாலா சாரின் மனைவியும் மகனும் உடன் இருந்தார்கள்.
கடந்த இரண்டரை மாதங்களாக மனதளவிலும் மிகவும் கஷ்டப்பட்டு விட்டார் மனோபாலா சார் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.