சுவிட்சர்லாந்துக்கு மன நல பாதிப்பு: வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி காட்டம்
எக்கச்சக்கமான வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்துக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சுவிட்சர்லாந்துக்கு மன நல பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான Ueli Maurer, பிறப்பின் மூலம் குடியுரிமை பெறாமல், வெளிநாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து குடியுரிமை பெறுவோரை குறை கூறியுள்ளார்.
வலதுசாரி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியைச் சார்ந்தவரான Maurer, எக்கச்சக்கமான வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்துக்கு, மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
புலம்பெயர்தலால், பிறப்பால் சுவிஸ் குடிமக்களான நாம் நமது அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறோமோ என எனக்கு கவலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் Maurer.
சுவிஸ் குடியுரிமை பெற்று சுவிஸ் குடிமக்களாகும் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வாக்களிப்பதால், தேர்தல்களில் சரியான முடிவுகளை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், Maurer சார்ந்த சுவிஸ் மக்கள் கட்சி, இப்படி குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாவதை தடை செய்யவும் திட்டமிட்டுவருகிறது.
ஆனால், இரட்டைக் குடியுரிமைகொண்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவிஸ் நாடாளுமன்றத்தில் உள்ளனர். அதனால் புலம்பெயர்ந்து சுவிஸ் குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிறப்பால் சுவிஸ் குடிமக்களாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிப்படையாக சண்டை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |