கூவத்தில் விழுந்த மனநலம் பாதித்த இளம்பெண்.. காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்
தமிழகத்தில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக குடும்பத்துடன் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூவத்தில் விழுந்ததால், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார்.
கூவத்தில் விழுந்த இளம்பெண்
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் விநாயகர் சிலையை கரைப்பதற்காக மெரினா கடற்கரைக்கு வந்தார்.
அப்போது, அந்த இளம்பெண் திடீரென நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பூக்கடை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொலிஸார் இளம்பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்
அப்போது, அந்த வழியாக சென்ற ராயப்பேட்டை ஆட்டோ ஓட்டுநர் மகேஷ், கூவத்தில் இளம்பெண் தத்தளிப்பதை பார்த்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கூவத்தில் குதித்தார். பின்பு, பொலிசாரின் கயிறு மூலம் இளம்பெண்ணை காப்பாற்றினர்.
உடனே, முதலுதவி சிகிச்சைக்காக இளம்பெண்ணை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.
இதில், உயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |