சாதனை படைத்த Mercedes Benz., இந்தியாவில் விற்பனை அமோகம்
இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் Mercedes Benz கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான Mercedes Benz நிறுவனம் இந்தியாவில் அதன் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
2023-24 நிதியாண்டில் நிறுவனம் 18,123 கார்களை விற்பனை செய்துள்ளது.
SUV-களுக்கான உள்நாட்டு தேவை அதிகரித்ததன் காரணமாக SUV-களின் விற்பனை முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது என Mercedes-Benz இந்தியாவின் MD மற்றும் CEO சந்தோஷ் கூறியுள்ளார்.
இந்நிறுவனம் 2024 ஜனவரி-மார்ச் மாதங்களில் மட்டும் 5,412 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
இந்த ஆண்டு உள்நாட்டு சந்தையில் மூன்று EVகள் உட்பட மொத்தம் ஒன்பது வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
புதுடெல்லி மற்றும் மும்பையில் இரண்டு ஆடம்பர MAR 20X விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mercedes Benz, Mercedes Benz Cars, Mercedes Benz India, Luxury Cars