பணத்தை தூக்கியெறிந்த சொகுசு கார் உரிமையாளர்: கண்ணீருடன் நின்ற பெண் ஊழியர்!
சீனாவில் எரிவாயு நிலையத்தில் சொகுசு காரில் வந்த நபர் ஒருவர், எரிபொருளை நிரப்பிவிட்டு அதற்கான பணத்தை தூக்கி எரிந்து விட்டு சென்றதையடுத்து அதை கண்ணீருடன் எடுக்கும் ஊழியரின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பணத்தை தூக்கியெறிந்த கார் உரிமையாளர்
சீனாவில் எரிவாயு நிலையத்திற்கு வந்த கருப்பு மெர்சிடிஸ் கார் ஒன்று வருகிறது, காரின் உள்ளே இருந்தபடியே அந்த காரின் உரிமையாளர் எரிவாயு நிரப்பும் படி நிலைய ஊழியரிடம் தெரிவிக்கிறார்.
அந்த ஊழியரும் காரில் எரிபொருளை நிரப்பிவிட்டு, எரிவாயு நிரப்பியதற்கான பணத்தை பெறுவதற்காக கார் உரிமையாளரின் அருகில் செல்லுகிறார்.
ஆனால் அந்த சொகுசு கார் உரிமையாளர் பணத்தை பெண் ஊழியரின் கையில் கொடுக்காமல் தூக்கி வீசி விட்டு புறப்படுகிறார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஊழியர் கண்களில் கண்ணீர் வழிய கீழே சிதறிக் கிடந்த பணத்தை எடுக்கிறார்.
இணையவாசிகள் கண்டனம்
இந்நிலையில் கார் உரிமையாளரின் திமிரான நடவடிக்கை தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கார் உரிமையாளருக்கு எதிரான் கடுமையான கண்டத்தை பெற்று வருகிறது.
அதில் ஒருவர், நீங்கள் அதிக பணம் வைத்து இருப்பதால் நல்ல பண்பு கொண்டவராகி விட முடியாது என தெரிவித்துள்ளார்.
மற்றொரு நபர், ஆசிய நாடுகளில் இதுபோன்று நடப்பது வருத்தம் தரக்கூடியது என தெரிவித்துள்ளார்.