இந்தியாவில் புதிய மெர்சிடீஸ்-பென்ஸ் S-Class அறிமுகம் - விலை என்ன தெரியுமா?
ஜேர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ்-பென்ஸ், தனது புதிய S-Class மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் ஆரம்ப விலை ரூ.2.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்).
இந்த முறை, S-Class Plug-in Hybrid Electric Vehicle (PHEV) வடிவில் அறிமுகமாகிறது.

S450e மாடலில் 3.0 லிட்டர் இன்லைன்-சிக்ஸ் பெட்ரோல் என்ஜின், 22kWh பேட்டரி மற்றும் 120kW மின்சார மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த சக்தி 449bhp மற்றும் 680Nm டார்க்.
மின்சாரத்தில் மட்டும் 115 கிமீ வரை பயணம் செய்யும் திறன் கொண்டது. 60kW வரை வேகமாக சார்ஜ் செய்யலாம். நிறுவனம் 32.3kmpl மைலேஜ் கிடைக்கும் எனக் கூறியுள்ளது.

புதிய S-Class-இல் புதிய கிரில், சக்கரங்கள், டெயில் லாம்ப் வடிவமைப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
13.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 15 ஏர்பேக், 31 ஸ்பீக்கர் Burmester சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த மாடல் Launch Edition Exclusive Line மற்றும் Manufaktur Edition AMG Line ஆகிய சிறப்பு பதிப்புகளிலும் கிடைக்கிறது.
மெர்சிடீஸ் S-Class-க்கு முக்கிய போட்டியாளர் BMW 7-Series ஆகும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |