புதிய ஒன்லைன் வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய மேகன்! ரசிகர்கள் முந்தியதால் சில நிமிடங்களில் சூடுபிடித்த விற்பனை
பிரித்தானிய இளவரசி மேகன் மார்க்கல் வணிக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிய ஒன்லைன் வலைத்தளம்
2020ஆம் ஆண்டில் தனது கணவர் ஹரியுடன் முன்னணி அரச கடமைகளில் இருந்து மேகன் மார்க்கல் பின்வாங்கினார்.
இந்த நிலையில், தனது புதிய ஒன்லைன் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வணிக வலைத்தளத்தை வீடியோ ஒன்றில் மூலம் அறிமுகப்படுத்தும் மேகன், 'உங்களில் பலர் கேட்டிருப்பீர்கள், இதோ உங்களுக்காக! ஒரு வாரத்தைத் தொடங்க ஒரு சிறிய ஷாப்பிங்' என கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நேரலைக்கு வந்த சிறிது நேரத்திலேயே, ரசிகர்கள் பலர் பல சந்தர்ப்பங்களில் அவர் காணப்பட்ட பழுப்பு நிற Saint Laurent mulesஐ வாங்க விரைந்ததால், நீமன் மார்கஸ் உட்பட சில மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் செயலிழந்தன.
நெட்ஃபிலிக்ஸ் தொடர் விமர்சனம்
மேகனால் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளில் 1,000 பவுண்ட் மதிப்புள்ள வின்ட்சர் உடை, 600 பவுண்ட் மதிப்பு காலணிகள் மற்றும் 200 பவுண்ட் விலையில் காதணிகள் அடங்கும்.
மேகன் மார்க்கலின் சமீபத்திய ஒன்லைன் செயல்பாடு, அவரது சமீபத்திய புதிய நெட்ஃபிலிக்ஸ் தொடர் தொடர்பாக, விமர்சன ரீதியான பின்னடைவை சந்தித்த பிறகு இது வருகிறது.
ஹரி, மேகன் தம்பதி தங்களது வணிக ஒப்புதல்களை அரச குடும்பம் ஏற்க மறுத்ததுதான், அவர்கள் அங்கிருந்து வெளியேறியதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |