துருக்கி யூரோ கிண்ணம் ஹீரோ... தடை செய்யப்பட்ட சைகையால் சிக்கலில்
யூரோ கிண்ணத்தில் இருந்து ஆஸ்திரியா அணி வெளியேற காரணமான துருக்கி வீரர் தற்போது UEFA விசாரணை வட்டத்தில் சிக்கியுள்ளார்.
துருக்கியின் காலிறுதி வாய்ப்பு
யூரோ கிண்ணம் காலிறுதிக்குள் நுழைந்துள்ள துருக்கி அணி, ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. இதனால் யூரோ கிண்ணம் தொடரில் இருந்து ஆஸ்திரியா வெளியேறியது.
இந்த ஆட்டத்தில் Merih Demiral என்பவர் பதிவு செய்த இரு கோல்களே துருக்கியின் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. வெற்றிக்களிப்பில் 26 வயது Merih Demiral செய்த சைகையே தற்போது அவரை தடை செய்யப்படும் சிக்கலுக்கு தள்ளியுள்ளது.
கையின் ஆள்காட்டி மற்றும் சுண்டு விரலையும் இணைத்து தலைக்கு மேல் உயர்த்தியது தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்றின் சைகை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர வலதுசாரிகள் அமைப்பு
தற்போது இது தொடர்பில் UEFA விசாரணை முன்னெடுத்து வருகிறது. இதனால் காலிறுதியில் அவர் களமிறங்க முடியாமல் போகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
துருக்கியில் செயல்படும் தீவிர வலதுசாரிகள் அமைப்பு ஒன்றின் வணக்க சைகையை Merih Demiral வெற்றிக் கொண்டாட்டத்தின் போது செய்துள்ளார் என்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
மேலும் அந்த சைகை ஆஸ்திரியா ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஆஸ்திரியா மற்றும் பிரான்சில் அப்படியான சைகை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜேர்மனியில் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |