இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்
உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களாலும் சமயங்கள் வேறுப்பாடின்றி அனைவராலும் மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழாவாக கிறிஸ்துவின் பிறப்புவிழா காணப்படுகிறது.
இயேசு கிறிஸ்து பிறப்பு விழா
இவரது பிறந்த நாள் கிறிஸ்தவர்களிடையே மிகவும் மகிழ்ச்சியான விழாக்களில் ஒன்றாகும்.
இந்த பண்டிகை முக்கியமாக கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களால் கொண்டாடப்படுகிறது என்றாலும், இது உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு பண்டிகையாகும்.
கடவுளின் மகனான இயேசு கிறிஸ்து இந்த நாளில் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் போக்க பூமிக்கு வந்தார் என்று நம்பப்படுகிறது.
இந்த பிறப்பு விழாவானது ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் திகதி கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் உள்ள பேராலங்களில் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கமாகும்.
இதையடுத்து ஒவ்வொருவரினது வீட்டிலும் கிறிஸ்து அவதரித்ததன் அடையாளமாக, நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பார்கள்.
இரவில் வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள் உள்பட பல தரப்பினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துவதும் உண்டு.
லங்காசிறியின் குழுமத்தின் வாழ்த்துக்கள்
பல வருட கால வாடிக்கையாளராக எங்களுடன் இணைந்திருப்பதை நினைத்து பெருமையடைவது மட்டுமல்லாது...
லங்காசிறி ஊடக வலையமைப்பின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் உங்கள் பங்களிப்பும், பக்கபலமும் இருகின்றதென்பதை இன்பமயமான இந்நாளில் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |