கொடூர செயல்! மனதை உலுக்கும் சம்பவம்..ஜேர்மனி சேன்சலர் மெர்ஸ்
ஜேர்மனியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சேன்சலர் ஃபெட்ரிக் மெர்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பலி எண்ணிக்கை 6 உயர்வு
வடக்கு ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ஐந்து பேர் உயிரிழந்ததாக காவல்துறை அறிவித்தது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் உயிரிழந்ததாக காவல்துறை அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், சந்தேகப்படும்படியான இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
45 வயதுடைய ஜேர்மனியர்
அதே சமயம் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், சந்தேக நபர் 45 வயதுடைய ஜேர்மனியர் என்று கூறப்பட்டுள்ளது.
குழந்தையின் காப்பாளர் உரிமை தொடர்பான தகராறே இந்த சம்பவத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுவதாக காவல் தலைமை அதிகாரி கேத்ரின் ஷுவோல் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து ஜேர்மனி சேன்சலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) கூறுகையில், "இது மனதை உலுக்கும் சம்பவம். மற்றவர்களுக்கு உதவவும், பாதுகாக்கவும் விரும்பிய பலர், தங்கள் உயிரை இழந்தனர் அல்லது காயமடைந்தனர்" எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |