அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெறுவோம்... ஜேர்மனியின் புதிய தலைவர் மெர்ஸ்
ஜேர்மனியின் புதிய சேன்சலராக பொறுப்பேற்க வாய்ப்புள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து விலகி
ஜேர்மனியின் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதில் நாட்டின் புதிய சேன்சலராக பொறுப்பேற்க வாய்ப்புள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அமெரிக்கா தொடர்பில் பதிவு செய்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஐரோப்பிய கண்டத்தின் எதிர்காலத்திற்கு நேரெதிரான நிலைப்பாடு கொண்ட நாடாக அமெரிக்கா மாறிவருகிறது என்றும், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து விலகி தனித்துச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் அமெரிக்க அதிகாரிகளின் தலையீட்டையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் நிர்வாகமும், உலகின் பெரும் கொடீஸ்வரருமான எலோன் மஸ்க் ஆகியோர் தீவிர வலதுசாரிகளான AfD கட்சிக்கு ஆதரவளித்தும் கன்சர்வேட்டிவ் கட்சிகளான CDU/CSU வென்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவை வலுப்படுத்துவதே
ஐரோப்பாவை வலுப்படுத்தினால் மட்டுமே, அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து வெளியேற முடியும் என்றும், அமெரிக்காவிடம் இருந்து நாம் படிப்படியாக உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கு, கூடிய விரைவில் ஐரோப்பாவை வலுப்படுத்துவதே தமது முழு முன்னுரிமையாக இருக்கும் என்றும் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றியை ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்றுள்ளதுடன், இது ஜேர்மனியின் சிறந்த நாட்களில் ஒன்று எனவும் குறிப்பிட்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |