ஜேர்மன் மாகாண தேர்தல்கள்: ஆளுங்கட்சிக்கு மேலும் ஒரு வெற்றி
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைப்போல, ஜேர்மனியிலும் மாகாணத் தேர்தல்கள் நடைபெற்றுவருகின்றன.
சமீபத்தில் ஒரு மாகாண தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததால் அக்கட்சிக்கு பின்னடைவு என்னும் ரீதியில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவந்தன.
ஆனால், அந்த நிலை மாறியுள்ளது!
ஆளுங்கட்சிக்கு மேலும் ஒரு வெற்றி
சமீபத்தில், Baden-Württemberg மாகாணத்தில் நடந்த தேர்தல்களில், சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் சார்ந்த ஆளும் CDU கட்சி, ஐறிய கட்சியான கிரீன்ஸ் கட்சியிடம் தோல்வி கண்டது.
அதைத் தொடர்ந்து, அடுத்துவரும் Hesse மாகாணத் தேர்தல், மெர்ஸுக்கு ஒரு பரீட்சை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, மெர்ஸின் CDU கட்சி, Hesse மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், கிரீன்ஸ் கட்சி மூன்றாவது வலிமையான கட்சி என்ற நிலையையும் இழந்தது.
அதைத் தொடர்ந்து, நேற்று Rhineland -Palatinate மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது.
அந்த தேர்தலிலும் CDU கட்சி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் மத்தியில் போலவே, இங்கும் SPD கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் CDU கட்சித் தலைவரான Gordon Schnieder தெரிவித்துள்ளார்.
ஆக, எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் CDU கட்சி வெற்றி பெற்றுள்ளது. என்றாலும், பல கட்சிகளுக்கும், மக்களில் ஒரு பிரிவினருக்கும் அச்சத்தை உருவாக்கிவரும் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, மெல்ல முன்னேறி வருவதையும் மறுப்பதற்கில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |