எல்லையில் நிரந்தரக் கட்டுப்பாடுகள்... வருங்கால ஜேர்மன் தலைவரின் கருத்தால் குழப்பம்
எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்து ஜேர்மனியின் வருங்கால சேன்ஸலர் கூறியுள்ள கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
எல்லையில் நிரந்தரக் கட்டுப்பாடுகள்...
உலக நாடுகள் பல, புலம்பெயர்தல் தொடர்பில் ஒன்றில் கட்டுப்பாடுகளை எடுத்தவண்ணம் உள்ளன, அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் குறித்து கருத்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளன.
அதாவது, புலம்பெயர்தல், பல நாடுகளில் தவிர்க்கமுடியாத பேசுபொருளாகிவிட்டது.
அவ்வகையில், தற்போது ஜேர்மனியின் வருங்கால சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ள ஒரு கருத்து சுவிட்சர்லாந்தில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
அதாவது, நிரந்தர எல்லைக் கட்டுப்பாடுகள் மூலம் சட்ட விரோத புலம்பெயர்தலை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து, ஜேர்மனியின் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் மெர்ஸ்.
ஆனால், ஜேர்மனியுடன் அப்படி எந்த பேச்சுவார்த்தையும் தாங்கள் நடத்தவில்லை என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |