உக்ரைன் மீதான தொடர் தாக்குதல்: ஜேர்மன் சேன்ஸலர் கண்டனம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்கு ஜேர்மன் சேன்ஸலர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான தொடர் தாக்குதல்
புதன்கிழமையன்று ரஷ்யா உக்ரைன் நகரங்கள் பலவற்றின்மீது சுமார் 800 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
ரஷ்ய உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தப்படுவது அதுவே முதல் முறை என கருதப்படும் நிலையில், அந்தத் தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக தாக்குதல் நிகழ்த்தியது. ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில், தலைநகர் கீவ்விலுள்ள குடியிருப்பு ஒன்றிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று தகர்ந்ததில், ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்கு ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Russia's heaviest attacks on Ukraine in a long time send a clear message: Moscow is choosing escalation over negotiation. We continue to stand with Ukraine. Kyiv and its partners remain ready for talks on a just peace. Russia keeps waging war.
— Bundeskanzler Friedrich Merz (@bundeskanzler) May 14, 2026
சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள், ரஷ்யா, பேச்சுவார்த்தைகளைவிட போரையே விரும்புகிறது என்பதையே தெளிவாகக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜேர்மனி தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக நிற்பதாகவும், உக்ரைனும் அதன் கூட்டாளர்களும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ரஷ்யாவோ போரையே தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |