ரஷ்யாவுக்கு உக்ரைன் மட்டும் போதாது... எச்சரிக்கும் ஜேர்மன் சேன்ஸலர்
Merz defends support for Ukraine in budget: ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், தனது பட்ஜெட் உரையில் உக்ரைனுக்கான ஆதரவுக்கு தன் தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் விடயத்தில், ஜேர்மனி தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகிறது.
எதிர்ப்பு
ஆனால், அரசு உக்ரைனுக்கு ஆதரவளிப்பதற்கு ஜேர்மனியில் எதிர்ப்பு உருவாகிவருகிறது.
சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஆலிஸ் வீடல், உக்ரைனுக்கு ஜேர்மனி ஆதரவு அளிப்பது குறித்து கடுமையான விமர்சனம் முன்வைத்தார்.

அதேபோல, ஜேர்மனி உக்ரைனுக்கு உதவும் விடயம் தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கும் விருப்பம் குறைந்துவருவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
எச்சரிக்கும் ஜேர்மன் சேன்ஸலர்
ஆனால், ஜேர்மனி உக்ரைனுக்கு உதவுவது குறித்த தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய சேன்ஸலர் மெர்ஸ், ரஷ்யாவுக்கு உக்ரைன் மட்டும் போதாது என்று கூறியுள்ளார்.

அதாவது, ரஷ்யா உக்ரைனுடன் நிறுத்தாது, ஏற்கனவே பால்டிக் பகுதியில் ரஷ்யா பதற்றத்தை உருவாக்கிவருகிறது, போலந்திலும், கருங்கடல் பகுதியிலும், ஏன் விண்வெளியிலும் கூட அத்துமீறிவரும் ரஷ்யா, நம் நாட்டிலும் அத்துமீறியுள்ளது.
இதுதான் உண்மையான நிலவரம் என்று கூறிய மெர்ஸ், இதை புரிந்துகொள்ளாதவர்கள் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள இயலாதவர்கள், அல்லது, அவர்கள் நமது நாட்டின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தாராளவாதம் தொடர்பாக முற்றிலும் மாறுபட்ட நோக்கங்களைப் பின்தொடர்கிறார்கள் என்று பொருள் என்றார் அவர்.
ஆகவே, நாம், ஐரோப்பியர்களாக, ரஷ்யாவுக்கு அதன் எல்லை எது என்பதைக் காட்டியாகவேண்டும், அதை நாம் செய்யவேண்டும், செய்வோம், என்றும் தனது உரையில் உறுதியாகத் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
ஆகத்து மாதம், Leipzig விமான நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தையும் தனது உரையில் சுட்டிக் காட்டத் தவறவில்லை மெர்ஸ்!