ஜேர்மனியைப் போல கொரியாவும் இணையவேண்டும்: சேன்ஸலர் விருப்பம்
Merz says he hopes Korea can reunify like Germany did: ஜேர்மனியைப் போல கொரியாவும் இணையவேண்டும் என ஜேர்மன் சேன்ஸலர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸ், இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக தென்கொரியாவுக்குச் சென்றிருந்தார்.

கொரியாவும் இணையவேண்டும்
அக்டோபர் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் தென்கொரியாவுக்குச் சென்றிருந்த மெர்ஸ், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள ராணுவமயமற்ற பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது ஜேர்மனி ஒன்றிணைந்ததை நினைவுகூர்ந்த அவர், கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்ததைப்போல, ஒருநாள் வடகொரியாவும் தென்கொரியாவும் இணையும் என நம்புவோம் என்று கூறியுள்ளார்.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான எல்லைக்கு அருகே அமைந்துள்ள சமாதான கிராமம் என்று அழைக்கப்படும் பன்முன்ஜோம் கிராமத்துக்கும் மெர்ஸ் சென்றுள்ளார்.

அப்போது, சிறிது நேரம் அந்த இடத்திலுள்ள வடகொரிய பகுதிக்கு சென்ற மெர்ஸ், ஒரு நாடு பிரிவதால் ஏற்படும் வலியையும், மீண்டும் இணையவேண்டும் என்னும் ஆழ்ந்த விருப்பத்தையும் இந்த பகுதியிலாவது உணரலாம் என்று கூறினார்.

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரியப்போருக்குப் பின், கொரிய தீபகற்பம், வடகொரியா, தென்கொரியா என ஒரு எல்லைக்கோட்டால் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.