புலம்பெயர்தல் தொடர்பில் ட்ரம்பை கேலி செய்த மெர்ஸ்: எழுந்த கரவொலி
ஜேர்மன் சேன்ஸலரான மெர்ஸ், புலம்பெயர்தல் தொடர்பில் ட்ரம்பை கேலி செய்வதையும், அதற்கு கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்புவதையும் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ட்ரம்பை கேலி செய்த மெர்ஸ்
கட்சி மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், தான் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பிடம் தொலைபேசி வாயிலாக பேசியதாக குறிப்பிட்டார்.

அப்போது, ஜேர்மனியின் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக, புகலிடம் கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்துவிட்டதாக தான் ட்ரம்பிடம் கூறியதாக தெரிவித்தார்.
அதற்கு ட்ரம்ப், ‘என்ன, 60 சதவிகிதமா? நம்ப முடியவில்லையே’ என கூறியதாக குறிப்பிட்டார் மெர்ஸ்.
விடயம் என்னவென்றால், ட்ரம்ப் பேசுவது போலவே ஆங்கிலத்தில் மெர்ஸ் வேடிக்கையாக பேச, கூடியிருந்த அனைவரும் அதை கைதட்டி ரசித்துள்ளார்கள்.
அத்துடன் நிற்கவில்லை மெர்ஸ். தான் விரைவில் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்திக்க இருப்பதாகவும், புகலிடம் கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்துவிட்டது குறித்து விவரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |