புடின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர்: உருவாகியுள்ள சர்ச்சை
Merz outraged that German former Chancellor Schroeder attended Putin's birthday: ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் ஒருவர் புடினுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட விடயம் இந்நாள் சேன்ஸலர் மெர்ஸை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.
ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் ஒருவர் புடினுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரால் சர்ச்சை
ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரான கெரார்ட் ஷ்ரோடர், ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கு நெருக்கமாக நட்பு கொண்டவர் ஆவார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையிலும் புடினுடனான ஷ்ரோடரின் நெருக்கம் தொடர, அதன் காரணமாக ஜேர்மனியில் அவ்வப்போது சர்ச்சைகள் உருவாகிவருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் புடினுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளார் ஷ்ரோடர்.
வியாழக்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு 74ஆவது பிறந்தநாள். அதையொட்டி கிரெம்ளின் வட்டாரம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் புடினும் ஷ்ரோடரும் இணைந்து நிற்கும் காட்சிகள் வெளியாக, ஜேர்மன் சேன்ஸலர் கோபத்தில் கொந்தளிக்கிறார்.
உக்ரைன் போருக்கு புடின் மட்டுமே காரணம், அவரது உத்தரவுகள் பயங்கரமான துயரங்களையும், பொதுமக்களிடையே உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவருகின்றன. குடும்பங்கள் பிரிந்துள்ளன, உயிரிழப்புகள், காயங்கள் ஏற்படுகின்றன.
அப்படியிருக்கும் நிலையில், புடினுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஷ்ரோடர் கலந்துகொண்டுள்ள விடயம் ஒழுக்கமற்ற செயல் என இந்நாள் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கருதுகிறார் என அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.