உயர்ந்துவரும் எரிபொருள் விலைகள்... ஜேர்மன் சேன்ஸலர் அளித்துள்ள உறுதி
German Chancellor promises relief plan soon as pump prices hit record: ஜேர்மனியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், விரைவில் உதவி வருவதாக உறுதியளித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், செப்டம்பர் மாதம் காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை யூரோக்களாகவும் 2.25 டீசல் விலை 2.37 யூரோக்களாகவும் இருந்தது, மதியம் மேலும் அதிகரித்துள்ளது.
ஜேர்மன் சேன்ஸலர் அளித்துள்ள உறுதி
இந்நிலையில், எரிபொருள் விலைகள் தொடர்பில் விரைவில் உதவி வருவதாக உறுதியளித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.

பொதுமக்கள் பலர் தங்கள் அன்றாட தேவைகளுக்காக கார்களை பயன்படுத்திவரும் நிலையில், இதற்கு மேல் எரிபொருளுக்கு செலவு செய்யமுடியாது என்னும் ஒரு நிலையை அவர்கள் எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
ஆகவே, மக்களுக்கு உதவும் வகையில் விரைவில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
அது தொடர்பில் 16 மாகாணங்களுடனும், கூட்டணிக்கட்சிகளுடனும் ஆலோசனைகள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
என்றாலும், அது என்ன திட்டம் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை!