ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதி பெண்ணாகத்தான் இருக்கவேண்டும்: சேன்ஸலர் மெர்ஸ்
Merz says next German president must be a woman: ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதி பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.
ஜேர்மனியின் ஜனாதிபதியான ஃப்ராங்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மெயரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ளது.

ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துவக்கியுள்ள நிலையில், ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதி பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்னும் குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.
ஜனாதிபதிக்கான போட்டியில் பெண்கள்
ஏற்கனவே, ஜேர்மனியின் ஜனாதிபதிக்கான போட்டியில் ஏழு பெண்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதி பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும் கூறியுள்ளார்.

தலைநகர் பெர்லினில் நடைபெற்ற Christian Democratic Union (CDU) கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய மெர்ஸ், CDU கட்சி சார்பில் தான் ஒரு வேட்பாளரை முன்மொழிய இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், அந்த வேட்பாளர் ஒரு பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
CDU கட்சி பரிந்துரைக்கும் வேட்பாளர், ஜேர்மன் ஃபெடரல் நாடாளுமன்றத்தின் தலைவரான ஜூலியா க்லோக்னர், ஃபெடரல் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான கரின் பிரையன் மற்றும் முன்னாள் CDU தலைவர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரான ஆன்க்ரெட் க்ராம்ப் கேரன்பேயர் ஆகியோரில் ஒருவராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.