அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம்... யோசிக்காமல் பேசிவிட்ட ஜேர்மன் சேன்ஸலர்: நிதர்சன சிக்கல்கள்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் ஜேர்மனியில் வசிக்கின்றனர்.
அவர்களில் பலர் ஜேர்மனியுடன் நன்கு ஒருங்கிணைந்து வாழ்ந்துவருவதுடன், வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜேர்மன் சேன்ஸலரின் சமீபத்திய அறிவிப்பு அவர்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம்...
சிரியா நாட்டு அகதிகள் ஜேர்மனியில் உணவகங்கள், பராமரிப்பு சேவைகள் மற்றும் சிறு வணிகங்கள் என பல்வேறு விடயங்களில் ஈடுபட்டு ஜேர்மனியின் அன்றாட வாழ்வின் அங்கங்களாக மாறிவரும் நிலையில், ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸின் அறிவிப்பு, அச்சமூகத்தை உலுக்கியுள்ளது.

ஆம், ஜேர்மனியில் வாழும் சிரியா நாட்டவர்களில் 80 சதவீதம் பேரை மூன்று ஆண்டுகளுக்குள் சிரியாவுக்குத் திருப்பி அனுப்பப்போவதாக கூறியுள்ளார் அவர்.
சுகாதாரம், உணவுத்துறை, கட்டுமானம் மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகளில் தொழில் வாழ்க்கையை உருவாக்குவதிலும், ஜேர்மன் மொழியைக் கற்பதிலும், தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்புவதிலும் ஒரு தசாப்த காலமாகச் செலவழித்த சிரிய அகதிகளிடையே இந்த அறிவிப்பு ஒரு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதிதாகக் குடியுரிமை பெற்றவர்களில் சிரியர்கள் தற்போது மிகப்பெரிய குழுவாக இருப்பதாலும், அவர்கள் ஜேர்மனியில் பெருமளவில் பல்வேறு முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், பெருமளவிலான அகதிகளை சிரியாவுக்குத் திருப்பி அனுப்புவது ஜேர்மனியின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆக, ஜேர்மனியை தங்கள் சொந்த நாடாக எண்ணி வாழ்ந்துவரும் சிரியா நாட்டு அகதிகள் பலர், ஜேர்மன் சேன்ஸலரின் அறிவிப்பால் தற்போது தங்கள் எதிர்காலம் என்ன என தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |