போர்ச்சூழலுக்கு நடுவே ட்ரம்பை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் ஜேர்மன் சேன்ஸலர்
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல், ஈரான் கொடுத்துவரும் பதில் தாக்குதல் ஆகிய விடயங்களால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் நிலையில், வார இறுதியில் ஜேர்மன் சேன்ஸலர் அமெரிக்க ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள இருக்கிறார்.
ட்ரம்பை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் ஜேர்மன் சேன்ஸலர்
ஜேர்மனியில் மாகாண தேர்தல்கள் நடைபெற்றுவரும் நிலையில், வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள இருப்பதாக ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் துவங்கியதைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் ஜலசந்தியில் போக்குவரத்துக்கு பாதுகாப்பளிக்க ட்ரம்ப் நேட்டோ நாடுகளின் உதவியை நாடியபோது, பல நேட்டோ நாடுகளைப்போல ஜேர்மனியும் உதவ மறுத்துவிட்டது.
பின்னர் தங்கள் நிலைப்பாட்டை சற்று மாற்றிக்கொண்டுள்ள பிரான்சும் ஜேர்மனியும் போர் நின்றபிறகு ஹோர்மூஸ் ஜலசந்தியில் போக்குவரத்துக்கு பாதுகாப்பளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில் மெர்ஸ் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் நடக்குமா என கேள்வி எழுந்த நிலையில், வார இறுதியில் ட்ரம்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள இருப்பதை மெர்ஸ் உறுதி செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |