AfD கட்சியின் வெற்றி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்: ஜேர்மன் சேன்ஸலர்
Chancellor Merz says recent election result changes all of Germany: சமீபத்திய தேர்தல் முடிவுகள் முழு ஜேர்மனி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் சேன்ஸலர் மெர்ஸ்.
ஞாயிற்றுக்கிழமை வெளியான Saxony-Anhalt மாகாண தேர்தல் முடிவுகள், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் முதல், பல தரப்பு அரசியல்வாதிகளையும் ஆட்டம் காணச் செய்துள்ளன.
AfD கட்சியின் வெற்றி
பொதுவாகவே, கிழக்கு ஜேர்மனியைப் பொருத்தவரை, ஒவ்வொரு முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் கருத்துக்கணிப்புகள் நடத்தப்படும்.

கருத்துக்கணிப்புகளில் தீவிர வலதுசாரி புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சிக்கு அதிக ஆதரவு என முடிவுகள் வெளியாகும்.
ஆனால், கடைசி நேரத்தில் வேறொரு கட்சி வெற்றி பெற்று AfD கட்சியை பின்னுக்குத் தள்ளிவிடும்.
இம்முறை Saxony-Anhalt மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும், AfD கட்சிக்கு அதிக ஆதரவு என்றே முடிவுகள் வெளியாகின.
ஆனால், இது வழக்கமாக நடப்பதுதானே என மற்ற கட்சிகள் அலட்சியமாக இருந்துவிட்டனவோ என்னவோ தெரியாது. இம்முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் AfD கட்சி அமோக வெற்றி பெற்றுவிட்டது.
ஜேர்மன் சேன்ஸலரின் கருத்து
Saxony-Anhalt மாகாண தேர்தல் முடிவுகள், பல தரப்பு அரசியல்வாதிகளையும் ஆட்டம் காணச் செய்துள்ள நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் ஆடிப்போனது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மெர்ஸ், Saxony-Anhalt மாகாண தேர்தல் முடிவுகளால், அம்மாகாணத்தில் மட்டுமல்ல, ஜேர்மனி முழுவதிலுமே சில விடயங்கள் மாறிவிட்டன என்று கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச அரங்கிலும், இந்த தேர்தல் முடிவுகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.
ஏனென்றால், ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஜேர்மனி ஆதரவளிக்கிறது. ஆனால், வெற்றி பெற்றுள்ள AfD கட்சியினர், அதை எதிர்க்கிறார்கள். அத்துடன், AfD கட்சியினரில் பலர், ரஷ்ய ஜனாதிபதி புடின் அரசுடன் நெருக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |