நேர்காணல் ஒளிபரப்பான நேரத்தில் ஓப்ராவுக்கு மேகன் அனுப்பிய மெசேஜ்! என்ன அனுப்பினார் தெரியுமா?
உலகளவில் பெரும் சர்ச்சையை ஏறப்டுத்தியுள்ள நேர்காணல் ஒளிபரப்பான நேரத்தில் தொகுப்பாளர் ஓப்ராவுக்கு மேகன் அனுப்பிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் இருவரும் பிரித்தானிய அரசு குடும்பத்துக்கு எதிராக பல அதிற்சியூட்டும் குற்றச்சட்டுகளை முன்வைத்து ஒரு பேட்டியை அளித்துள்னர்.
ஓப்ரா வின்ஃப்ரெவுடனான இந்த நேர்காணல் பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானதையடுத்து உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேகன் மார்கலின் தந்தை உட்பட பிரித்தானியர்கள் பலரும் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், பிரித்தானிய மகாராணியும் மேகன் மற்றும் ஹாரியின் குற்றச்சாட்டுகள் விரைவில் தீர்க்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குரிய நேர்காணல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேர்த்தில், தனக்கு மேகன் மார்கல் அனுப்பிய செய்தியை ஓப்ரா வெளியிட்டுள்ளார்.
நேர்காணல் ஒளிபரப்பப்பட்டதிலிருந்து அவர் ஹாரி மற்றும் மோகனிடம் 'உண்மையில் பேசவில்லை' என்றும் "ஏனென்றால் நாங்கள் வெவ்வேறு நேர மண்டலங்களில் இருக்கிறோம்" என்று ஓப்ரா கூறினார்.
ஆனால், நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தில், மேகன் "நிகழ்ச்சி எப்படி போகிறது" ("How's it going?) என குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறினார்.
அதற்கு "எனக்கும் தெரியவில்லை, அனால் அது நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்னால் சொல்லமுடியும், ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது" என பதிலளித்ததாக ஓப்ரா கூறியுள்ளார்.
"எனவே நான் இன்று அவர்களுடன் உரையாடுவேன்" என்று ஓப்ரா கூறியுள்ளார்.