லண்டன் மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி! இது இரண்டாவது முறை என அறிவிப்பு
லண்டனில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நேற்று கொரோனாவால் ஒருவர் கூட பலியாகவில்லை என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரித்தானியா உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானியாவில் கொரோனா உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக தற்போது வரை பிரித்தானியாவில் கொரோனாவால் 4,330,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 230-ஆக இருந்தது. அதன்பின் மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது.
அதன் படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் திகதி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
ஆனால் உருமாறிய கொரோனா, இரண்டாவது அலையால் தலைநகரான லண்டனில் கொரோனா வேகமெடுத்தது. ஆனால், பைசர், அஸ்ட்ரா-ஜெனேகா போன்ற தடுப்பூசியால் லண்டன் நகரில் பாதிப்பு குறைய துவங்கியுள்ளது.
கடந்த மாதம் 27-ஆம் திகதி லண்டனில் நகரில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. அதேபோல் நேற்று (மார்ச் 28-ஆம் திகதி) கொரோனா தொற்றால் ஒருவரும் உயிரிழக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை லண்டன் நகரில் 7,08,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18 ஆயிரம் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் அதிக உயிரிழப்பை சந்தித்த 3-வது நகரம் லண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.