கடைசி கட்டத்தில் இரட்டை கோல் அடித்த மெஸ்ஸி! கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு நுழைந்த இன்டர் மியாமி
லீக்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் ஓர்லாண்டோ சிட்டி அணியை 1-3 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி வீழ்த்தியது.
மார்கோ பசலிக்
சேஸ் மைதானத்தில் நடந்த லீக்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இன்டர் மியாமி மற்றும் ஓர்லாண்டோ சிட்டி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 45+1வது நிமிடத்தில் ஓர்லாண்டோ சிட்டி (Orlando City) அணி வீரர் மார்கோ பசலிக் (Pasalic) கோல் அடித்தார். இதற்கு பதில் கோல் அடிக்க இன்டர் மியாமி (Inter Miami) போராடியது.
ஒரு வழியாக 77வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) கோலாக மாற்றினார்.
மெஸ்ஸி இரண்டாவது கோல்
அதனைத் தொடர்ந்து 88வது நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
அடுத்த 3வது நிமிடத்தில் (90+1) டெலஸ்கோ செகோவியா (Telasco Segovia) கோல் அடிக்க, இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஓர்லாண்டோ சிட்டி அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |