குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டம்! மெஸ்ஸி மனைவி வெளியிட்ட அழகிய புகைப்படம்
அன்டோனெலா ரோகுஸ்ஸோ தனது கணவர் லியோனல் மெஸ்ஸி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டியாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி கடந்த 18ஆம் திகதியில் இருந்து கொண்டாட்ட மனநிலையில் தான் இருக்கிறார். ஏனெனில் அவர் சார்ந்த அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று மெஸ்ஸி தனது குடும்பத்தாருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அழகான குடும்பம்
இது தொடர்பான புகைப்படத்தை மெஸ்ஸியின் மனைவி அண்டோனெலா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் மெஸ்ஸி, அண்டோனெலா மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் கிறிஸ்துமஸ் மரம் முன்னால் நிற்கின்றனர். ஐந்து பேரும் மிகவும் அழகான உடைகளை அணிந்தபடி காணப்படுகின்றனர்.