'எங்களை மன்னியுங்கள்' ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மெஸ்ஸி!
அர்ஜென்டினாவின் FIFA உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு சொந்த ஊரான ரொசாரியோவில் உள்ள உள்ளூர் மக்களிடம் மெஸ்ஸி ஏன் மன்னிப்பு கேட்டார்.
உலகக் கோப்பை வெற்றி
2022 FIFA உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை தோற்கடித்து உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, அதன் 36 ஆண்டுகால கனவை நிறைவேற்றிக்கொண்டது.
1978 மற்றும் 1986-ல் வெற்றி பெற்ற அர்ஜென்டினாவுக்கு கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் இது மூன்றாவது பட்ட வெற்றியாகும். தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் முதன்முறையாக உலகோப்பையை வென்றதால், மெஸ்ஸியின் கனவு நனவானது.
Getty Images
மெஸ்ஸி இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்து ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த உலகக்கோப்பை தொடரில், 35 வயதான அவர் ஏழு கோல்களை அடித்தார் மற்றும் மூன்று உதவிகளை வழங்கினார். அவரது ஆல்ரவுண்ட் செயல்பாட்டிற்காக மெஸ்ஸிக்கு 'கோல்டன் பால்' விருது வழங்கப்பட்டது. 2014 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக இந்த விருதை வென்றார்.
வரவேற்பு
புதிய உலக சாம்பியன் அணியைச் சந்திக்கவும் வாழ்த்தவும் லட்சக்கணக்கான கணக்கான ரசிகர்கள் தெருக்களில் படையெடுத்தனர். மெஸ்ஸி தனது அணியுடன் சேர்ந்து சொந்த நாட்டில் ஊர்வலம் சென்றபோது அவர்களுக்கு ஹீரோக்களை போன்ற வரவேற்பு அளிக்கப்பட்டது.
மெஸ்ஸி பிறந்த இடமான ரொசாரியோவை அடைந்ததும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டிற்கு வெளியே கூடினர். மகத்தான வெற்றிக்குப் பிறகு பத்து நாட்களுக்குப் பிறகும் தங்கள் ஹீரோவைப் பார்ப்பதற்கான ஆசையும் வெறியம் தொடர்கிறது.
AP
ரசிகர்களிடம் மன்னிப்பு
இந்நிலையில், மெஸ்ஸி தன்னால் சந்திக்க முடியாத ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
"சரி, பொதுவாக ரொசாரியோவில் உள்ள அனைத்து மக்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை அனுப்ப விரும்புகிறோம். நீங்கள் எப்பொழுதும் எங்களிடம் காட்டும் அன்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், குறிப்பாக இப்போது நான் உலகக் கோப்பையிலிருந்து திரும்பி வந்த இந்த நேரத்தில், எங்களையும் மன்னியுங்கள், ஏனென்றால் சில சமயங்களில் அனைவரையும் பார்ப்பது கடினம், நாங்கள் சில நாட்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருக்கிறோம், சில சமயங்களில் அது சிக்கலாக இருக்கும்," என மெஸ்ஸி கூறியுள்ளார்.
மெஸ்ஸி உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை (26) விளையாடி உலக சாதனை படைத்தார். உலகக் கோப்பையின் நவீன வடிவத்தின் ஒவ்வொரு சுற்றிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.