கத்தார் உலகக்கோப்பைக்கு பின்..தனது அணிக்கு திரும்பிய மெஸ்ஸி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
அர்ஜென்டினா நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி அணிக்கு திரும்பியுள்ளதாக பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அறிவித்துள்ளது.
அணிக்கு திரும்பும் மெஸ்ஸி
கத்தாரில் நடந்த உலகக்கோப்பையில் தொடரில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வெற்றி வாகை சூடி கோப்பையை கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணி ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே தனது கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜேர்மைனுக்கு திரும்பியதுடன், சிறப்பாக விளையாடி வருகிறார்.
@FRANCOIS LO PRESTI/AFP/AFP via Getty Images
ஆனால் சக அணி வீரரான மெஸ்ஸி அணிக்கு திரும்பவில்லை. அவரைப்போல் மற்றொரு நட்சத்திர வீரர் நெய்மரும் கடந்த போட்டியில் விளையாடாததால் PSG அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
PSG அறிவிப்பு
இந்த நிலையில், மெஸ்ஸி பயிற்சிக்காக அணிக்கு திரும்பியுள்ளதாக PSG தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. உலகக்கோப்பை கிரீடத்தை வென்ற பின்னர் மெஸ்ஸி இன்று காலை பயிற்சி மையத்திற்கு திரும்பினார் என பாரிஸ் செயின்ட் அணி குறிப்பிட்டுள்ளது.
? ??????? ???
— Paris Saint-Germain (@PSG_inside) January 4, 2023
Leo Messi de retour au Centre d’Entraînement ce matin après son sacre en Coupe du monde ! ?❤️?#BravoLeo pic.twitter.com/7Dt3z8qKfG
மெஸ்ஸி வருகையால் PSG ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். GOAT அணிக்கு திரும்பிவிட்டதாக மெஸ்ஸி ரசிகர்கள் சிலாகித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.