ரொனால்டோவின் இமாலய சாதனையை முறியடித்த மெஸ்சி!
ஐரோப்பாவின் முதல் ஐந்து லீக்களில் 702 கோல்களை அடித்து மெஸ்சி சாதனை படைத்துள்ளார்.
PSG வெற்றி
நேற்று நடந்த Nice அணிக்கு எதிரான போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
லயோனல் மெஸ்சி 26வது நிமிடத்திலும், செர்ஜியோ ராமோஸ் 76வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
@EPA PHOTO
ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளிய மெஸ்சி
இந்தப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் ரொனால்டோவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார். அதாவது ஐரோப்பாவின் முதல் ஐந்து லீக்களில் 702 கோல்களை மெஸ்சி அடித்துள்ளார்.
அதிலும் ரொனால்டோவை விட 105 குறைவான போட்டிகளில் மெஸ்சி இந்த சாதனையைப் படைத்துள்ளார். மேலும், PSG அணிக்காக 68 போட்டிகளில் மெஸ்சி 30 கோல்கள் அடித்துள்ளார்.
குறிப்பாக இந்த சீஸனில் மட்டும் அவர் 34 போட்டிகளில் 19 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@IMAGO/Independent Photo Agency/Alessio Tarpini/Live Media