ரொனால்டோ சாதனையை சமன்செய்த லியோனல் மெஸ்ஸி: சிறந்த வீரராக மீண்டும் தெரிவு
2022ல் FIFA அமைப்பின் ஆகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரர் என்ற பட்டத்தை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முன்னெடுக்கப்பட்ட பிரமாண்ட விழாவில் மெஸ்ஸிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கத்தாரில் நடந்த கால்பந்து உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.
@getty
மட்டுமின்றி சிறந்த வீரருக்கான Golden Ball விருதையும் தட்டிச்சென்றார். 2022ல் Ligue 1 கோப்பையை கைப்பற்ற PSG அணிக்கு உதவினார். 37 ஆட்டங்களில் 17 கோல்களை பதிவு செய்த மெஸ்ஸி, சக வீரர்கள் கோல் அடிக்க 24 முறை உதவியுள்ளார்.
சர்வதேச அளவில் 18 கோல்களை பதிவு செய்த மெஸ்ஸி, 6 முறை சக வீரர்களுக்கு கோல் வாய்ப்பை உருவாக்கினார். இதனையடுத்தே, இரண்டாவது முறையாக மெஸ்ஸி FIFA அமைப்பின் ஆகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
@getty
அத்துடன், ரொனால்டோ மற்றும் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஆகியோரின் சாதனையை சமன்செய்துள்ளார்.