இரட்டை கோல் அடித்து மிரட்டிய மெஸ்சி! பெனால்டி ஷூட்டில் இன்டர் மியாமி அபார வெற்றி
எப்.சி டல்லஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்டர் மியாமி அணி பெனால்டி ஷூட்அவுட்டில் அபார வெற்றி பெற்றது.
மெஸ்சியின் விரைவான கோல்
டொயோட்டா மைதானத்தில் நடந்த லீக்ஸ் கோப்பை போட்டியில் இன்டர் மியாமி, எப்.சி டல்லஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே லியோனல் மெஸ்சி அதிவேகமாக கோல் அடித்து எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
7' | Jordi ➡️ Messi to put us on the board early in the match ??#DALvMIA | 0-1 | ? #MLSSeasonPass on @AppleTV pic.twitter.com/ZTIM2k819g
— Inter Miami CF (@InterMiamiCF) August 7, 2023
அதன் பின்னர் எப்.சி டல்லஸ் அணியினர் மெஸ்சியின் இன்டர் மியாமிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர்.
அந்த அணியின் பாகுண்டோ (37), பெர்னார்ட் (45) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடிக்க, முதல் பாதியில் எப்.சி டல்லஸ் அணியின் கையே ஓங்கி இருந்தது.
முதல் பாதியில் முன்னிலை வகித்த எப்.சி டல்லஸ்
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் எப்.சி டல்லஸின் ஆலன் வெலஸ்கோ கோல் அடித்தார். இதனால் எப்.சி டல்லஸ் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அடுத்த இரண்டு நிமிடங்களில் இன்டர் மியாமியின் பெஞ்சமின் கிரேமஷ்ச்சி (65) கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 68வது நிமிடத்தில் எப்.சி டல்லஸ் வீரர் ராபர்ட் டெய்லர் சுயகோல் அடித்தார்.
மெஸ்சியின் இரண்டாவது கோல்
அதற்கு பதிலாக தங்கள் சார்பில் என மார்கோ ஃபர்ப்ஃபன் 80வது நிமிடத்தில் கோல் அடிக்க, மெஸ்சி 85வது நிமிடத்தில் பிரீகிக்கில் கோல் அடித்து மிரட்டினார்.
OTRO GOLAZO DE NUESTRO CAPITÁN ? ??#DALvMIA | 4-4 pic.twitter.com/aOhBw7LJGZ
— Inter Miami CF (@InterMiamiCF) August 7, 2023
இறுதியில் போட்டி 4-4 என டிரா ஆனது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இன்டர் மியாமி அணி 5-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |