உலகக் கோப்பை இறுதிப்போட்டி! மெஸ்ஸி பிட்னஸ் எப்படி? அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் பயிற்சியில் கலந்து கொண்ட வீடியோ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மெஸ்ஸி
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தொடை தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வியாழன் அன்று நடந்த பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என கேள்வி எழுந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மெஸ்ஸி நேற்று நடைபெற்ற இறுதி பயிற்சியில் கலந்து கொண்டார்.
அதிகாரபூர்வ வீடியோ
அதில் அவர் உற்சாகமாக இருந்ததையும் காண முடிந்தது, இது தொடர்பான அதிகாரபூர்வ வீடியோவை அர்ஜென்டினா தேசிய அணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்,
35 வயதான மெஸ்ஸு இதுவரையில் உலகக் கோப்பையை ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.