இன்டர் மியாமி அணிக்காக முதல் கோல் அடித்த மெஸ்சி! கொண்டாடும் அமெரிக்க ரசிகர்கள்
லியோனல் மெஸ்சி லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக தனது முதல் கோலை அடித்தார்.
இன்டர் மியாமிக்காக முதல் போட்டி
அமெரிக்காவில் லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. புளோரிடாவில் நடந்த போட்டியில் மெக்சிகோவின் கிரஸ் அசுல் மற்றும் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிகள் மோதின.
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிக்காக விளையாடி வந்த மெஸ்சி முதல் முறையாக இன்டர் மியாமிக்காக களமிறங்கினார்.
முதல் பாதியின் 44வது நிமிடத்தில் இன்டர் மியாமியின் ராபர்ட் டெய்லர் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் கிரஸ் அணியின் உரியில் அண்டுனா (65வது நிமிடம்) பதில் கோல் அடித்தார்.
El primer gol de Messi con Inter Miami ????
— Inter Miami CF (@InterMiamiCF) July 22, 2023
Messi scores in his first match with the club to give us the lead in the 94th minute. pic.twitter.com/pI7bYjEK63
மெஸ்சியின் வெற்றி கோல்
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (90+4) ரசிகர்கள் எதிர்பார்த்த நிகழ்வு நடந்தது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி தனது முதல் கோலை அடித்து மிரட்டினார்.
Twitter (InterMiamiCF)
இதன்மூலம் இன்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிரஸ் அசுல் அணியை வீழ்த்தியது.
தங்கள் நாட்டின் கிளப் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே மெஸ்சி கோல் அடித்ததை அமெரிக்க ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Twitter (InterMiamiCF)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |