உலகக்கோப்பைக்கு பின் PSGக்கு திரும்பிய மெஸ்ஸி! அடித்த முதல் கோல்.. நடுவர் கொடுத்த ட்விஸ்ட்
பிரான்சில் நேற்று நடந்த Ligue 1 கால்பந்து போட்டியில், PSG அணி 2-0 என்ற கோல் கணக்கில் Angers அணியை வீழ்த்தியது.
5 நிமிடத்தில் கோல்
பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே PSG ஒரு கோல் அடித்தது.
அந்த அணியின் ஹூகோ எகிட்டிக்கே மின்னல் வேகத்தில் செயல்பட்டு பந்தை வலைக்குள் தள்ளினார். அதன் பின்னர் இரண்டாம் பாதியில் 72வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார்.
ஆனால் வீரர்கள் அதனை கொண்டாடுவதற்குள் நடுவர் ஆஃப்சைடு சோதனை செய்ய மூன்றாம் நடுவரிடம் கூறினார். சிறிய இடைவெளிக்கு பின் அது ஆஃப்சைடு இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
?? #PSGSCO
— Paris Saint-Germain (@PSG_inside) January 11, 2023
Le résumé de la victoire ? @AngersSCO (2-0) au Parc des Princes ?️ pic.twitter.com/eodlngbEeC
மெஸ்ஸியின் முதல் கோல்
உலகக்கோப்பைக்கு பின் தனது கிளப்பில் விளையாடும் மெஸ்ஸி அடித்த முதல் கோல் இதுவாகும். இறுதிவரை Angers அணியால் கோல் அடிக்க முடியாததால் PSG அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
? ??? ????? est impliqué dans 18 buts en Ligue 1 cette saison (8 buts, 10 passes décisives). Au total, toutes compétitions confondues, il est impliqué dans 52 buts en 54 matches (24 buts, 28 passes décisives) avec le Paris Saint-Germain. ❤️?#PSGSCO pic.twitter.com/piOdmFtLhN
— Paris Saint-Germain (@PSG_inside) January 11, 2023
இதன்மூலம் 15 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் PSG முதலிடம் வகிக்கிறது. 16ஆம் திகதி நடக்கும் தனது அடுத்தப் போட்டியில் ரென்னெஸ் அணியை PSG எதிர்கொள்கிறது.