எதிரணிக்கு தண்ணிகாட்டி வெற்றி கோல் அடித்த மெஸ்ஸி! உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா அபாரம் (வீடியோ)
மெஸ்ஸியின் அபார கோலினால் அர்ஜென்டினா அணி 1-0 என ஈகுவடார் அணியை வீழ்த்தியது.
உலகக்கோப்பை தகுதிச்சுற்று
ஈகுவடார் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா அணி விளையாடியது.
தரவரிசைப் பட்டியலில் 46வது இடத்தில் இருந்தாலும் ஈகுவடார் அணி, 5வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
Messi scores vs Ecuador
— Argentina2022WC? (@Argentina2022WC) September 8, 2023
World Cup 2026 Qualifiers pic.twitter.com/7riFr7Epxs
எனினும் மெஸ்ஸி தனக்கே உரித்தான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், ஈகுவடார் அணியின் தடுப்பு அரணை தாண்டி மெஸ்ஸி கோல் அடித்தார்.
மெஸ்ஸி மீது தண்ணீர் பாட்டில் வீச்சு! கட்டியணைக்க வந்தவரை மடக்கிய காப்பாளர்..பரபரப்பு சம்பவங்கள் (வீடியோ)
மிரட்டிய மெஸ்ஸி
அதுவே வெற்றிக்கான கோலாக மாறியது. இறுதியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. மெஸ்ஸி கோல் அடித்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
அர்ஜென்டினா தனது அடுத்த தகுதிச்சுற்று போட்டியில் 13ஆம் திகதி பொலிவியா அணியை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |