நொடிப்பொழுதில் கோல் அடித்த மெஸ்ஸி! கம்பீரமாக அரையிறுதியில் நுழைந்த இன்டர் மியாமி (வீடியோ)
லீக்ஸ் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் சார்லோட் அணியை வீழ்த்தியது.
காலிறுதி போட்டி
DRV PNK மைதானத்தில் நடந்த லீக்ஸ் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி மற்றும் சார்லோட் அணிகள் மோதின.
ஆரம்பம் ஆதிக்கம் செலுத்தி இன்டர் மியாமி அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது.
ஜோசெஃப் மார்ட்டினெஸ் பெனால்டியில் (12வது நிமிடம்) ஒரு கோலும், 32வது நிமிடத்தில் ராபர்ட் டெய்லர் ஒரு கோலும் அடித்தனர்.
Messi does it again ??
— Inter Miami CF (@InterMiamiCF) August 12, 2023
5 games straight✅
8 goals✅
Campana to Messi for our fourth ?#MIAvCLT | 4-0 pic.twitter.com/l7amAxwzrB
மெஸ்ஸியின் அசத்தலான கோல்
அதன் பின்னரான இரண்டாம் பாதியின் 78வது நிமிடத்தில், சார்லோட் அணியின் அடில்சன் மலண்டா சுயகோல் அடித்ததால் இன்டர் மியாமியின் கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் மெஸ்ஸி தன்னிடம் வந்த பந்தை லாவகமாக நொடிப்பொழுதில் கோலாக மாற்றினார். கடைசி வரை சார்லோட் அணியால் கோல் அடிக்க முடியாததால் இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து 16ஆம் திகதி நடக்க உள்ள அரையிறுதியில் philadelphia அணியை இன்டர் மியாமி எதிர்கொள்கிறது.
மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக 5 போட்டிகளில் 8 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |