ஃபுளோரிடாவில் அற்புதம் நிகழ்த்திய மெஸ்ஸி! காலிறுதியில் Inter Miami..வைரல் வீடியோ
நாஷ்வில்லே அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
லூயிஸ் சுவாரஸ்
CONCACAF சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் போட்டியில் நாஷ்வில்லே (Nashville) அணியை எதிர்கொண்டது இன்டர் மியாமி (Inter Miami).
ஃபுளோரிடாவில் பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில், லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 7வது நிமிடத்தில் கோல் போஸ்ட் வரை பந்தை கடத்தி சென்றார்.
ஆனால், சற்று உயர தூக்கி kick செய்ததால் அவரது கோல் miss ஆனது. எனினும், மியாமியின் மற்றொரு வீரர் லூயிஸ் சுவாரஸ் 8வது நிமிடத்தில் மெஸ்ஸி பாஸ் செய்து கொடுத்த பந்தை வலைக்குள் தள்ளினார்.
Suárez starts off our second leg of @TheChampions with a bang?
— Inter Miami CF (@InterMiamiCF) March 14, 2024
Messi sets up Suárez for a finish that puts us in the lead! #MIAvNSH | 1-0 pic.twitter.com/RAh1hBukeP
மெஸ்ஸி கோல்
அதனைத் தொடர்ந்து, 23வது நிமிடத்தில் தன்னிடம் பாஸ் செய்யப்பட்ட பந்தை நொடிப்பொழுதில் உதைத்து மெஸ்ஸி கோலாக மாற்றினார்.
இதற்கு நாஷ்வில்லே அணியால் உடனடியாக கோல் அடிக்க முடியாததால், முதல் பாதியில் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
Lionel Messi this season is just exquisite. Just From his passes, dribbles, runs he makes, finishing, just top notch. You can tell he's in top form . Feels so good to watch him play ?✨?#GOAT #MIAvNSH #ConcaChampions #InterMiamiCF pic.twitter.com/HG0B4DMuVW
— Fortune (@Tune_officiial) March 14, 2024
இரண்டாம் பாதியிலும் மியாமி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 63வது நிமிடத்தில், மியாமி வீரர் சுவாரஸ் kick செய்து பறந்து வந்த பந்தை, ராபர்ட் டெய்லர் தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார்.
முக்தார் கோல்
அதன் பின்னர் துடிப்புடன் செயல்பட்ட நாஷ்வில்லே அணியின் முக்தார் 80வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆனால் VAR-யில் check செய்தபோது அது offside கோல் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் இறுதியாக 90+3 நிமிடத்தில் நாஷ்வில்லே அணிக்கு கோல் கிடைத்தது. அந்த அணியின் சாம் சுர்ரிட்ஜ் இன்டர் மியாமியின் அரணை உடைத்து கோல் அடித்தார்.
Lookin to get back in the second half. pic.twitter.com/CVab8vGDOv
— Nashville SC (@NashvilleSC) March 14, 2024
எனினும், ஆட்டநேர முடிவில் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் நாஷ்வில்லேவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |