உலகக் கோப்பை வெற்றி... மெஸ்ஸியால் பல பில்லியன் பவுண்டுகளை அள்ளிக்குவித்த நிறுவனங்கள்
கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றி, தமது நீண்டகால கனவை நிறைவேற்றிக்கொண்டுள்ளார் அர்ஜென்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி.
ஆதாயம் பெற்றுள்ள நிறுவனங்கள்
பிரான்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் அவரது ஆட்டத்தை கொண்டாடிய ரசிகர்களை தவிர்த்து, குறிப்பிட்ட சில நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு ஆதாயம் பெற்றுள்ளது.
லியோனல் மெஸ்ஸி இணைந்து பணியாற்றும் பல நிறுவனங்கள் இந்த உலகக் கோப்பையின் போது சந்தை மதிப்பில் குறைந்தது 42 பில்லியன் பவுண்டுகள் வரையில் ஆதாயம் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பையின் போது சந்தை மதிப்பை அதிகரித்த சில நிறுவனங்களில் Budweiser 7.51%, Louis Vuitton (6.56%), Mastercard (3.87% ) Activision (3.81%), Pepsi (1.11%) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இதனிடையே, கத்தாரில் இருந்து மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா அணி வீரர்கள் நாட்டுக்கு புறப்பட்டு விட்டதாகவும், அர்ஜென்டினா திருவிழா கோலம் பூண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.