ஜேர்மனியில் பாயர்ன் முனிச்சை பழிதீர்க்குமா PSG? தீவிர பயிற்சியில் ஈடுபடும் மெஸ்ஸி, எம்பாப்பேயின் வீடியோ
பாயர்ன் முனிச் அணிக்கு எதிராக இன்று இரவு நடக்கும் போட்டியில் விளையாடும் PSG அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதிர்ச்சி தோல்வி
கடந்த மாதம் 15ஆம் திகதி நடந்த போட்டியில், PSG அணி 0-1 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச்சிடம் தோல்வியடைந்தது.
இது PSG மட்டுமின்றி மெஸ்ஸி, நெய்மர் மற்றும் எம்பாப்பே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜேர்மனியின் Alஎம் lianz Arena மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் மீண்டும் பாயர்ன் முனிச் அணியை PSG சந்திக்கிறது.
தீவிர பயிற்சியில் மெஸ்ஸி - எம்பாப்பே
இதற்காக மெஸ்ஸி, எம்பாப்பே உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் PSG பகிர்ந்துள்ளது. கடந்த முறை கண்ட தோல்விக்கு தங்கள் அணி பழி தீர்க்குமா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
??⚽️
— Paris Saint-Germain (@PSG_inside) March 7, 2023
Dernier entraînement de nos Parisiens avant #FCBPSG ✨ pic.twitter.com/VwNzjqwpWb
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால், நட்சத்திர வீரர் நெய்மர் இந்த சீசனில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
@PSG_inside
@PSG_inside
@Alex Grimm/Getty Images