நூலிழையில் தப்பிய கோல்! மெஸ்ஸி அடித்த அற்புதமான ஷாட்: கமெராவில் பதிவான காட்சி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின், ஈக்வெடார் அணிக்கெதிரான ஆட்டத்தில், மெஸ்ஸி அடித்த கோல் நூலிழையில் தப்பிய வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவில் எப்படி யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறதோ, அதே போன்று கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது.
பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் கால் இறுதிக்கு அர்ஜெண்டினா, உருகுவே, பராகுவே, சிலி (ஏ பிரிவு), ஈக்வெடார் (பி பிரிவு) அடங்கிய அணிகள் தகுதி பெற்றன. பொலிவியா, வெனிசுலா அணிகள் வெளியேற்றப்பட்டன. அதன் படி இன்று நடைபெற்று வரும் கால் இறுதி ஆட்டத்தில், அர்ஜெண்டினா மற்றும் ஈக்வெடார் அணிகள் விளையாடி வருகின்றன.
Messi doing what Messi does best for Argentina. Shit the bed ‼ @Argentina is this your king? ???? #CopaAmerica2021 pic.twitter.com/1ZFk5JSlrM
— Baow ? (@Brazi_Gniuz) July 4, 2021
இதில் சற்று முன் வரை 41 நிமிடம் வரை இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை, இருப்பினும் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி பல் அற்புதமான ஷாட்களை அடித்தார்.
ஆனால், அவை எல்லாம் கோலாக மாறவில்லை, குறிப்பாக ஆட்டத்தின் 24.45-வது நிமிடத்தில் அவர் அடித்த ஷாட் கிட்டத்தட்ட கோல் போஸ்ட் அருகே சென்று, கம்பியில் தட்டி வெளியே வந்துவிட்டது.
இதனால் ஒட்டு மொத்த அர்ஜெண்டினா ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.