மெஸ்சி அடித்த கோலை மறுத்த நடுவர்! இருமுறை பெனால்டிகளை தவறவிட்ட எம்பாப்பே..அதிர்ச்சியடைந்த PSG ரசிகர்கள்
மோண்ட்பெல்லியர் அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி அடித்த கோல் ஆப்சைடு என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆப்சைடு கோல்
கடந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த நெய்மர் இல்லாமல் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி இன்றைய போட்டியில் களமிறங்கியது.
பிரான்சின் Stade de la Mosson மைதானத்தில் தொடங்கிய போட்டியில் PSG அணி மோண்ட்பெல்லியர் அணிக்கு எதிராக மோதியது. ஆக்ரோஷமாக ஆரம்பித்த லயோனல் மெஸ்சி, ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.
34' Pas de but pour Leo Messi, un hors-jeu est signalé#𝐌𝐇𝐒𝐂𝐏𝐒𝐆 | 𝟎-𝟎
— Paris Saint-Germain (@PSG_inside) February 1, 2023
இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். ஆனால் கள நடுவர் Goal Check என்று கூறினார். அப்போது மெஸ்சி ஆப்சைடில் இருந்தது தெரிய வந்தது.
🔄 21' @KMbappe doit céder sa place, @hekitike9 fait son entrée en jeu#𝐌𝐇𝐒𝐂𝐏𝐒𝐆 | 𝟎-𝟎 pic.twitter.com/KlI7H1EugC
— Paris Saint-Germain (@PSG_inside) February 1, 2023
இதன் காரணமாக அவர் அடித்த கோல் ஆப்சைடு என்று நடுவர் அறிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
எம்பாப்பே ஏமாற்றம்
மேலும் மற்றொரு நட்சத்திர வீரர் எம்பாப்பே தனக்கு கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளை கோல் ஆக மாற்ற தவறவிட்டார். இதுவும் PSG ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. எதிரணியும் கோல் அடிக்காததால், முதல் பாதியில் கோல்கள் விழவில்லை.
@Getty Images

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.