மெஸ்ஸியா? ரொனால்டோவா? இறப்பதற்கு முன்னர் ஜாம்பவான் பீலே தேர்வு செய்த ஒரு பெயர்
மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரில் ஒருவரை நிலையான வீரர் என முன்னர் தேர்வு செய்திருக்கிறார்.
பீலே
பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக கொண்டாடப்படுபவர்.
1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி பீலே தனது 82வது வயதில் காலமானார்.
skysports
ரொனால்டோவா? மெஸ்ஸியா?
இதனிடையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் யூடியூப் சேனலான பில்ஹடோவுக்கு அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது. அப்போது பீலேவிடம், தற்போதைய கால்பந்து வீரர்களில் இரண்டு ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பீலே கூறுகையில், இப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ மிகவும் நிலையான வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நீங்கள் மெஸ்ஸியை புறந்தள்ள முடியாது என கூறினார்.