மெஸ்ஸியின் இந்தியப் பயணத்திற்கு இத்தனை கோடிகளா? கைதான நபர் கூறிய மிரள வைக்கும் தொகை
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்திற்கான மொத்த செலவு ரூ.100 என தெரிய வந்துள்ளது.
லியோனல் மெஸ்ஸி
கடந்த டிசம்பர் 13ஆம் திகதி அன்று, கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) கலந்து கொண்டார். 
Salt Lake மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அவரைக் காண அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.
மெஸ்ஸியை சுற்றி பலர் கூடியதால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அவர் விரைவாக வெளியேறியதால் ரசிகர்கள் கோபப்பட கலவரம் வெடித்தது.
அதன் விளைவாக நிகழ்வின் முக்கிய அமைப்பாளரான சதத்ரு தத்தா, நிகழ்வு முடிந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார்.
ரூ.100 கோடி
இந்த நிலையில், அவர் விசாரணை அதிகாரிகளிடம் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி, மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்கப்பட்டதாகவும், ரூ.11 கோடி இந்திய அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டதாகவும், இதன்மூலம் மொத்தம் ரூ.100 கோடி செலவிடப்பட்டதாகவும் செய்தி நிறுவனமான பிடிஐ வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், மொத்த தொகையில் 30 சதவீதம் ஸ்பான்சர்களிடம் இருந்து பெறப்பட்டது, 30 சதவீதம் டிக்கெட் விற்பனை மூலம் ஈட்டப்பட்டது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
அத்துடன் ஆரம்பத்தில் 150 மைதான அனுமதி சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறிய சதத்ரு தத்தா, அந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கைது செய்யப்பட்ட குற்றவாளி, அந்த குறிப்பிட்ட செல்வாக்கு மிக்க நபர் மைதானத்திற்கு வந்தவுடன், மெஸ்ஸி நிகழ்ச்சிக்குத் திட்டடமிடப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் சீர்குலைந்துவிட்டதாகவும், அதனால் தன்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்" என்றார்.
நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, மெஸ்ஸிக்கு முதுகில் தொடுவதையோ அல்லது கட்டிப்பிடிப்பதையோ பிடிக்காது என்றும், அவரின் பாதுகாப்பிற்கு பொறுப்பான வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், இந்த கவலையை முன்கூட்டியே தெரிவித்திருந்தனர் என்றும் தத்தா கூறியதாகவும் தெரிகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |