ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டின கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தமது கால்பந்து வாழ்க்கையில் 1,000 கோல்கள் என்ற புதிய மைல்கல்லை தொட்டுள்ளார்.
மெஸ்ஸியின் 1000 கோல்கள்
Nantes அணியுடன் சனிக்கிழமை நடந்த ஆட்டத்திலேயே, 7 முறை Ballon d'Or விருதை வென்றுள்ள லியோனல் மெஸ்ஸி இந்த புதிய சாதனை படைத்துள்ளார்.
@getty
Nantes அணிக்கு எதிராக மெஸ்ஸியின் அந்த கோல் 1000வது எண்ணிக்கை என்பதுடன் PSG அணிக்காக ஐந்து ஆட்டங்களில் ஐந்து கோல்கள் என்ற புதிய சாதனையை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது அவர் தாமாகவே பதிவு செய்ததும் சக வீரர்களுக்காக கோல் வாய்ப்பை உருவாக்கியுள்ளதும் சேர்த்து இந்த என்ணிக்கை என கூறுகின்றனர். இது முதல் முறையாக பார்சிலோனா அணிக்காக களமிறங்கிய பின்னர், இந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்த சாதனை எனவும் கூறுகின்றனர்.
கால்பந்து களத்தில் 2004ல் அறிமுகமான லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா மற்றும் PSG அணிக்காக இதுவரை 701 கோல்கள் பதிவு செய்துள்ளதுடன், சக வீரர்களுக்கு கோல் வாய்ப்பை உருவாக்கி அளித்துள்ள எண்ணிக்கை 299 எனவும் தெரியவந்துள்ளது.
ரொனால்டோ இதுவரை 912 கோல்கள்
ஆனால் ரொனால்டோ இதுவரை 912 கோல்கள் மட்டுமே, தாமாகவும் சக வீரர்களுக்கு வாய்ப்பை உருவாக்கியதுமாக பதிவு செய்துள்ளார். மெஸ்ஸியை விடவும் 88 கோல்கள் குறைவான எண்ணிக்கையை ரொனால்டோ கொண்டுள்ளார்.
@getty
ஆனால் 1,000 கோல்கள் என்ற சாதனை கண்டிப்பாக மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி, ஐரோப்பாவின் முதல் ஐந்து லீக்குகளில் இருந்தும் எந்த வீரரும் நவீன காலத்தில் செய்யாத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.